சென்னை: இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) தொடரின் 14ஆவது லீக் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கே.எல். ராகுல் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
இதன்படி ராகுலும், மயாங்க் அகர்வாலும் முதலில் களமிறங்கனார்கள். புவனேஷ்வர் குமார் வீசிய மூன்றாம் ஓவரின் முதல் பந்திலேயே கேப்டன் ராகுல் 4(6) ரன்களில் ஆட்டமிழந்தார். பொறுமையாக ஆடி வந்த மயாங்க் அகர்வால் 22(25) ரன்களில் கலீல் அகமது பந்துவீச்சில் ரஷிதிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
இதனையடுத்து களமிறங்கிய பூரன் ஒரு பந்துகளைக் கூட சந்திக்காத நிலையில், டேவிட் வார்னரால் ரன் அவுட்டாக்கப்பட்டார். இந்த போட்டியிலும் பூரன் ரன் ஏதும் எடுக்கவில்லை. இத்தொடரின் நான்கு போட்டியிலும் பூரன் முறையே 0, 0, 9, 0 ரன்களையே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு களமிறங்கிய ஹூடா 13(11) ரன்களிலும், ஹென்ரிக்ஸ் 14(17) ரன்களிலும், ஃபேபியன் ஆலன் 6 (11) ரன்களிலும் நடையை கட்டினர்.