தமிழ்நாடு

tamil nadu

IPL 2021 DC vs MI: மும்பையை பழித்தீர்க்குமா ரிஷப் தலைமையிலான டெல்லி?

By

Published : Apr 20, 2021, 4:25 PM IST

Updated : Apr 20, 2021, 4:36 PM IST

ஐபிஎல் தொடரின் 13ஆவது ஆட்டத்தில்,டெல்லி கேப்பிடல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று (ஏப்.20) மோதுகிறது. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Rishabh Pant, Rohit Sharma
Match Preview: Chahar vs Ashwin key battle in MI-DC clash

சென்னை: கடந்த 2020 ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வென்று கோப்பையை தட்டிச்சென்றது. அந்த வடுவை ஆற்ற, ரிஷப் பந்த் தலைமையிலான தற்போதைய டெல்லி அணி, இன்றையப் போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கின்றது.

சென்னையில் நடைபெற்ற மூன்று போட்டிகளில், முதல் போட்டியில் பெங்களூரிடம் தோற்றாலும், அடுத்த இரண்டு போட்டிகளையும் வென்று மும்பை இந்தியன்ஸ் அணி அசூர பலத்தில் உள்ளது.

பும்ரா, போல்ட், ராகுல் சாஹர் பந்துவீச்சு கூட்டணி எதிரணி குறைவான ஸ்கோரைக் கூட எட்டமுடியாதவாறு இறுதிக்கட்ட ஓவர்களில் கட்டுக்கோப்பாக வீசி அசரவைக்கிறார்கள்.

சென்னை அணிக்கு எதிராகவும், பஞ்சாப் அணி்க்கு எதிராகவும் இரண்டாவது பேட்டிங் செய்து டெல்லி அணி எளிதில் வெற்றி பெற்றுள்ளது. இமாலய இலக்குகளை எட்டினாலும், முதல் பேட்டிங் செய்யும்போது அந்த அணியால் பெரிய இலக்குகளை நிர்ணயித்து அதை டிஃபண்ட (DEFEND) செய்யமுடியவில்லை. அதனால் தான் ராஜஸ்தான் அணி டெல்லியை எளிதாக வென்றது.

டெல்லி அணி இதுவரை மும்பை வான்கடேவில் விளையாடி வந்தது. ஆனால், அடுத்தடுத்த போட்டிகளை சேப்பாக்காத்தில் விளையாடவுள்ளதால், சுழற்பந்துவீச்சில் அஸ்வினுக்கு துணையாக அமித் மிஸ்ரா களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராபாடாவின் வருகை டெல்லி அணிக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது.

சென்னை ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்குமென்பதால் மும்பை அணியில் ராகுல் சாஹர், குர்னால் பாண்டியா, டெல்லி அணியில் அஸ்வின் ஆகியோர் இன்று விக்கெட் வேட்டை நடத்தவும் வாய்ப்புள்ளது.

நடப்பு தொடரில் டெல்லி அணியும், மும்பை அணியும் புள்ளிப்பட்டியலில் முறையே மூன்றாம், நான்காம் இடத்தில் உள்ளன. இப்போட்டியை வெல்ல இரு அணிகளும் மல்லுகட்டும் என்பதால் இன்று விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

இதையும் படிங்க: மருத்துவமனையிலிருந்து முரளிதரன் டிஸ்சார்ஜ்!

Last Updated : Apr 20, 2021, 4:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details