மும்பை: ஐபிஎல் தொடரின் 12ஆவது லீக் ஆட்டம் வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சாம்சன் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.
அதன்படி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக டூ பிளேசிஸ், ருத்ராஜ் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்கினர். முந்தைய ஆட்டத்தைப் போலவே ருத்ராஜ் இந்த ஆட்டத்திலும் 10(13) ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
அதன்பின், சிறிதுநேரம் அதிரடி காட்டிய டூ பிளேசிஸ் 33(17) ரன்களில் மோரிஸிடம் விக்கெட்டை இழந்தார். கடந்த போட்டியை போல் அரைசதத்தை நெருங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட மொயின் அலி 26(20) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய ராயுடு, ரெய்னாவுடன் இணைச்சேர்ந்து சிஎஸ்கேவின் ரன்ரேட்டை 10 ரன்கள் அளவிலேயே தொடர்ந்தனர். அதில் ராயுடு சக்காரியா பந்து வீச்சில் ரியான் பராக்கிடம் கேட்ச் கொடுத்து 27 (17) ரன்களில் அவுட்டானார். அதே ஓவரில் ஆட்டம் முதலே தடுமாறி வந்த ரெய்னா 18(15) ரன்களில் வெளியேறினார். அதன்படி சென்னை அணி 14 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 125 ரன்கள் எடுத்தது.