தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IPL 2021 RCB vs KKR: ஹாட்ரிக் டாஸை வென்றார் கோலி; ஆர்சிபி பேட்டிங் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பெங்களூரு - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் பத்தாவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

IPL 2021 RCB vs KKR, VIRAT KHOLI, Eoin Morgan
IPL 2021 RCB vs KKR

By

Published : Apr 18, 2021, 3:12 PM IST

சென்னை: ஐபிஎல் தொடரில் இன்று (ஏப்.18) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

மற்றொரு போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன. இப்போட்டியானது இரவு 7.30 மணிக்கு தொடங்கும்.

சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் பத்தாவது லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது.

பெங்களூரு அணியில் டேனியல் கிறிஸ்டியன் நீக்கப்பட்டு ராஜத் பட்டீதர் சேர்க்கப்பட்டுள்ளார். கொல்கத்தா அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி (கேப்டன்), ஏபி டிவில்லியர்ஸ், க்ளென் மேக்ஸ்வெல், தேவ்தத் படிக்கல், வாஷிங்டன் சுந்தர், ராஜத் பட்டீதர், யஷ்வேந்திர சாஹல், முகமது சிராஜ், ஹர்ஷல் படேல், சபாஷ் அகமது, கைல் ஜேமீசன்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: இயான் மோர்கன் (கேப்டன்), சுப்மன் கில், நிதீஷ் ராணா, ராகுல் திரிபாதி, ஷாகிப் அல் ஹசான், தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரஸ்ஸல், வருண் சக்கரவர்த்தி, ஹர்பஜன் சிங், பிரசித் கிருஷ்ணா, பாட் கம்மின்ஸ்

இதுவரை இரு அணிகளும் 26 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 14 போட்டிகளிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 12 போட்டிகளிலும் வென்றுள்ளன.

இதையும் படிங்க:IPL 2021: ராகுல் சஹார், போல்ட் மிரட்டல் பவுலிங் - ஹாட்ரிக் தோல்வியடைந்த சன்ரைசர்ஸ்

ABOUT THE AUTHOR

...view details