தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IPL 2021: டெல்லி அணியை சுருட்டிய கேகேஆர்

கொல்கத்தா - டெல்லி அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டத்தில், டெல்லி அணி 20 ஓவர்களுக்கு 127 ரன்களை எடுத்துள்ளது.

IPL 2021
IPL 2021

By

Published : Sep 28, 2021, 6:13 PM IST

சார்ஜா: 'இந்தியன் பிரீமியர் லீக்' எனப்படும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், தொடர் பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.

அதன்படி இரண்டாம் கட்ட போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கின. இந்நிலையில், 41ஆவது லீக் ஆட்டத்தில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் இன்று (செப். 28) மோதி வருகிறது.

ஸ்மித் ஆறுதல்

இப்போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்ததை அடுத்து, டெல்லி அணி பேட்டிங்கைத் தொடங்கியது.

டெல்லி அணி தொடக்க வீரர் தவான் 24 (20) ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னில் வெளியேறினார்.

அடுத்தடுத்து விக்கெட்

மூன்றாவது விக்கெட்டுக்கு ஸ்டீவ் ஸ்மித், பந்த் ஜோடி 37 ரன்களை எடுத்தது. இந்த ஜோடியை பெர்குசன் பிரித்தார். ஸ்மித் 39 ரன்களுக்கு வெளியேறிய நிலையில், ஹெட்மயர் 4, லலித் யாதவ் 0, அக்ஸர் படேல் 0 ஆகியோர் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.

இறுதி ஓவரில் அஸ்வின் 9 (8) ரன்களுக்கும், பந்த் 39 (36) ரன்களுக்கும், ஆவேஷ் 5 (3) ரன்களுக்கும் வெளியேற, டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களை எடுத்தது.

கொல்கத்தா அணி பந்துவீச்சில் பெர்குசன், நரைன், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையும் படிங்க: டோக்கியோ வீராங்கனை பவானி தேவியின் வாளை ஏலத்திற்கு விட்ட பிரதமர்

ABOUT THE AUTHOR

...view details