சார்ஜா:ஐபிஎல் தொடரில் 41ஆவது லீக் ஆட்டத்தில் இயான் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் இன்று மோதியது. இப்போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 127 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஸ்மித் 39 ரன்களை எடுத்தார். பந்துவீச்சு தரப்பில் பெர்குசன், நரைன், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
திணறிய தொடக்கம்
இதையடுத்து, 128 ரன்கள் என்ற எளிதான இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு வெங்கடேஷ் ஐயர், சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். வெங்கடேஷ் ஐயர் 14, திரிபாதி 9, சுப்மன் கில் 30, இயான் மார்கன் 0 என ஆட்டமிழக்க, கொல்கத்தா அணி 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.