துபாய்: இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. பயோ - பபுளில் இருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், தொடர் பாதியில் ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.
இதையடுத்து, இரண்டாம் கட்டப்போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன. 14ஆவது சீசனின் 30ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
பொல்லார்ட் கேப்டன்
இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி, மும்பையை பந்துவீச அழைத்துள்ளது. மும்பை அணியில் ரோஹித்துக்கு இப்போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனால், பொல்லார்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.