ஐபிஎல் 2021 தொடரின் 35 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் (சிஎஸ்கே) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் (ஆர்சிபி) மோதின. சார்ஜாவில் நடைபெற்ற இந்த போட்டியின் போது புழுதி புயல் காரணமாக டாஸ் போடுவது 30 நிமிடம் தாமதமானது.
அதன்பின் டாஸ் வென்ற சிஎஸ்கே பந்து வீச்சை தேர்வு செய்தது. சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஆர்சிபி அணியில் சச்சின் பேபி, கெய்ல் ஜேமிசனுக்கு பதிலாக நவ்தீப் சைனி, டிம் டேவிட் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.
ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டகாரர்களான விராட் கோலி, தேவ்தத் படிக்கல் களமிறங்கி ரன்களை குவிக்க ஆரம்பித்தனர். பவர் ப்ளேவில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்களை இந்த ஜோடி எடுத்தது.
அதன் பின் விராட் கோலி 53 ரன்கள் எடுத்தும் தேவ்தத் படிக்கல் 70 ரன்னிலும் அவுட்டாகினர். இவர்களுக்கு பின் இறங்கிய டி-வில்லியர்ஸ் 12 ரன்கள் எடுத்தும் மேக்ஸ்வெல் 11 ரன்களிலும் அவுட்டானார். இதனால் ஆர்சிபியின் ரன் ரேட் குறைந்தது.
ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 156 ரன்களை குவித்தது. சிஎஸ்கே அணி சார்பில் பிராவோ 3 விக்கெட்களையும் தாகூர் 2 விக்கெட்களையும் எடுத்தனர்.
இதையடுத்து 157 ரன்கள் என்ற இலக்குடன் சிஎஸ்கே அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான ருதுராஜ், டூபிளெசிஸ் களம் இறங்கினர். இதில் ருதுராஜ் 38 ரன்களிலும் டூபிளெசிஸ் 31 ரன்களிலும் அவுட்டாகினர். இவர்களின் இந்த பாட்னர்ஷிப் சிஎஸ்கே அணிக்கு சிறந்த அடித்தளத்தை அமைத்தது.
அதன்பின் இறங்கிய மொயீன் அலி 23 ரன்களிலும், அம்பதி ராயுடு 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களைத்தொடர்ந்து சுரேஷ் ரெய்னா 17 ரன்களும், தோனி 11 ரன்களும் எடுத்து சிஎஸ்கே அணியை வெற்றி பெற செய்தனர்.
இறுதியில் 18.1 ஓவர்களில் சிஎஸ்கே அணி 4 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.
இதையும் படிங்க: MENTOR vs CAPTAIN: சார்ஜா யாருக்கு சாதகம் - பிளே-ஆஃப் நோக்கி சிஎஸ்கே