தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பிபிசிஐ கூட்டம் இன்று நடக்கிறது - நனவாகுமா ரசிகர்களின் கனவு ! - ஐபிஎல் செய்திகள்

இந்திய கிரிக்கெட் தொடரான ஐபிஎல் போட்டியின் 14ஆவது சீசன் கரோனா தொற்று பரவல் காரணமாக பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. இச்சூழலில், பிசிசிஐ கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதனையடுத்து போட்டிகளை தொடர்ந்து நடத்துவது குறித்தான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

BCCI Important advice today, IPL 2021, பிசிசிஐ கூட்டம், ஐபில் ரசிகர்கள், கிரிக்கெட் ரசிகர்கள், கிரிக்கெட் செய்திகள், ஐபிஎல் செய்திகள், 14ஆவது ஐபிஎல் போட்டிகள்
பிபிசிஐ கூட்டம் இன்று நடக்கிறது

By

Published : May 29, 2021, 12:17 PM IST

Updated : May 29, 2021, 12:54 PM IST

மும்பை: ஐபில் போட்டிகளின் மீதமுள்ள போட்டிகளை நடத்துவது குறித்து இன்று பிசிசிஐகுழு ஆலோசனை நடத்தவுள்ளது.

ஐபிஎல் 2021 தொடரில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவது தொடர்பான முக்கிய தகவல், இன்று (மே.29) நடைபெறவுள்ள பிசிசிஐ கூட்டத்திற்கு பின்னர் வெளிவரும் எனக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டம் மதியம் காணொலி வாயிலாக நடைபெறுகிறது.

இரண்டு அணிகளின் வீரர்கள், நிர்வாகிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 14ஆவது சீசன் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில், ஐபிஎல் தொடர் மீண்டும் எங்கு நடத்தப்படுமா, மீதமுள்ள போட்டிகள் எங்கு நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஐபில் தொடர் மீண்டும், வரும் செப்டம்பர் மாதம், ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் என்று சமீபத்தில் செய்திகள் வெளியானது. மீதமுள்ள போட்டிகள், 'ஒரே நாளில் இரண்டு போட்டிகள்' என்ற முறையிலும், 7 போட்டிகள் 'ஒரு நாளில் ஒரு போட்டி' என்ற முறையிலும் நடத்தப்படும் என்றும் தகவல்கள் கசிந்தது.

தொடர்ந்து 21 நாள்களில் போட்டிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் பிசிசிஐ-இன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக காத்திருக்கின்றனர்.

Last Updated : May 29, 2021, 12:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details