தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மும்பை வெற்றிக்கு வித்திட்ட பாண்ட்யாவின் இரு ரன் அவுட்! - மும்பை இந்தியன்ஸ்

ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யாவின் துல்லியமான இரு ரன்அவுட் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது.

Hardik Pandya
ஹர்திக் பாண்ட்யா

By

Published : Apr 18, 2021, 8:08 PM IST

சென்னை: பவுலிங்கில் ராகுல் சஹார், போல்ட் கலக்கியது போல்,, பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யா இரண்டு விக்கெட்டுகளை ரன் அவுட் மூலம் முக்கிய நேரத்தில் எடுத்து சன்ரைசர்ஸ் அணியில் முதல் வெற்றி பயணத்துக்கு தடை போட்டார்.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் 9வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்.

இந்தப் போட்டியின் வெற்றிக்கு பின்னர் ஹர்திக் பாண்ட்யா, முக்கிய நேரத்தில் அணிக்காக இரண்டு ரன் அவுட்களை எடுத்தது பற்றி கூறியதாவது:

உண்மையச் சொல்ல வேண்டுமானால் பந்தை விரைவாக ஸ்டம்பை நோக்கி எறிவதில் மட்டும் கவனமாக இருந்தேன். ஆனால் வார்னர் கிரிஸை நெருங்காமல் இருக்கிறார் என்பதை அதன் பின்னர்தான் உணர்ந்தேன்.

எங்கள் அணி வீரர்கள் தங்களது முழு அனுபவத்தையும் வெளிப்படுத்தி வெற்றிப் பாதைக்கு அணியை அழைத்து செல்கின்றனர். தங்களது அனுபவத்தை கேப்டனிடம் தெரிவிப்பது அணிக்கு பேருதவியாக இருக்கிறது. ஆட்டத்தின்போது சிறு வாய்ப்பு கிடைத்தாலும் வெற்றிக்காக அதை தவறாமல் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடக்கத்தில் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்திய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பின்னர் துல்லியமான பந்து வீச்சு, பீல்டிங் மூலம் கட்டுப்படுத்தினர் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.

அபாயகரமான பேட்ஸ்மேனான வார்னர் தனது அணியின் முதல் வெற்றிக்காக பொறுப்பாக ஆடி வந்தார். 36 ரன்கள் எடுத்திருந்தபோது எதிர்திசையில் இருந்த வார்னர், மற்றொரு பேட்ஸ்மேன் விராத் சிங் பாய்ண்ட் திசையில் அடித்த பந்தை விரைவாக சிங்கிள் எடுக்க முயற்சித்தார்.

தன்னிடம் பந்து வந்தவுடன் மறுகணம் யோசிக்காமல் உடனடியாக வார்னர் ஓடிய திசையில் இருந்த ஸ்டம்புகளை நோக்கி பந்தை வேகமாக எறிந்தார் பாண்ட்யா. இதில் வார்னர் ரன் அவுட் ஆனார்.

அதேபோல் 15 பந்துகளில் 22 ரன்கள் தேவை என்ற பரபரப்பான நேரத்தில் கவர் திசையில் பந்தை அடித்து விரைவாக ரன் எடுக்க முயற்சித்த அப்துல் சமத்தை, மீண்டும் பாண்ட்யா தனது அற்புத பீல்டிங் மற்றும் த்ரோவால் பதம் பார்த்தார்.

இந்த இரு ரன் அவுட்களும் முக்கிய நேரத்தில் ஆனது சன் ரைசர்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

தற்போது வரை மூன்று போட்டிகள் விளையாடியுள்ள மும்பை இந்தியனஸ் அணி 2இல் வென்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க: IPL 2021: ராகுல் சஹார், போல்ட் மிரட்டல் பவுலிங் - ஹாட்ரிக் தோல்வியடைந்த சன்ரைசர்ஸ்

ABOUT THE AUTHOR

...view details