தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

RR Vs GT: ராஜஸ்தான் அணியை வெளுத்து வாங்கிய குஜராத் டைட்டன்ஸ்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி! - IPL 2023 updates in tamil

ஐபிஎல் 2023 போட்டியில், நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

RR Vs GT: தெறிக்க விட்ட குஜராத் டைட்டன்ஸ்.. ஸ்தம்பித்த ராஜஸ்தான்
RR Vs GT: தெறிக்க விட்ட குஜராத் டைட்டன்ஸ்.. ஸ்தம்பித்த ராஜஸ்தான்

By

Published : May 6, 2023, 7:09 AM IST

ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2023 போட்டியின் 16வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்றைய (மே 5) லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனால் பேட்டிங்கில் களம் இறங்கிய ராஜஸ்தான் அணியின் சாம்சன் மட்டும் 30 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மற்ற அனைத்து வீரர்களும் மிகவும் சொற்பமான ரன்களையே எடுத்தனர். இதனால், 17.5வது ஓவரிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்கள் எடுத்தது.

அதேபோல், குஜராத் அணியின் ரஷீத் கான் 3 விக்கெட்டுகளையும், நூர் அகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 119 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுப்மன் கில் மட்டும் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இருப்பினும், விரிதிம் சஹா மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகிய வீரர்கள் ஆட்டம் இழக்காமல் இறுதி வரை ஆடினர்.

இதனால், குஜராத் டைட்டன்ஸ் அணி 13.5 ஓவரிலேயே 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்களை எடுத்தது. எனவே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இதன் காரணமாக, 14 புள்ளிகள் உடன் குஜராத் டைட்டன்ஸ் முதல் இடத்திலும், 10 புள்ளிகள் உடன் ராஜஸ்தான் ராயல்ஸ் 4வது இடத்திலும் புள்ளிப் பட்டியலில் உள்ளது.

மேலும், நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிளேயிங் 11இல், சஞ்சு சாம்சன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), யாஷவி ஜாய்ஸ்வால், ஜோஸ் பட்லர், தேவ்துட் படிக்கல், ஷிம்ரோன் ஹெட்மெயிர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரெண்ட் போல்ட், ஆடம் ஜம்பா, சந்தீப் ஷர்மா மற்றும் யுஜ்வேந்திரா சாஹர் ஆகியோர் விளையாடினர்.

அதேபோல், குஜராத் டைட்டன்ஸ் அணியின் பிளேயிங் 11இல், ஹார்திக் பாண்டியா (கேப்டன்), விரிதிமான் சாஹா (விக்கெட் கீப்பர்), விஜய் ஷங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோஹர், ராகுல் டிவாடியா, ரஷீத் கான், மோஹித் ஷர்மா, நூர் அகமது, முகம்மது ஷமி மற்றும் ஜோசுவா லிட்டில் ஆகியோர் களம் ஆடினர்.

இதையும் படிங்க:SRH Vs KKR: ஐதராபாத் அணியை வீழ்த்திய கொல்கத்தா.. வருண் சக்ரவர்த்தி அபாரம்!

ABOUT THE AUTHOR

...view details