சென்னை: இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி, 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 போட்டியில் அணியை வழிநடத்துவார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார், சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி, கே.எஸ்.விஸ்வநாதன்.
சிஎஸ்கே அணியில் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்கள் குறித்து தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் பேசுகையில், 'இந்த சீசனில் சென்னை அணி நன்றாக விளையாடும் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன். தலைவர் எம்.எஸ்.தோனி கேப்டனாக இருந்து இந்த சீசனில் அணியை சிறப்பாக வழிநடத்துவார் என்பது அனைவரும் அறிவர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து ட்வைன் பிராவோ, அடம் மில்னே, கிறிஸ் ஜோர்டான், ஜகதீசன், சி. ஹரி நிஷாந்த், கே. பகத் வர்மா, கேம் ஆசிப், மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். சிஎஸ்கே அணியில் விடுவிக்கப்பட்ட இவ்வீரர்களை தேர்வு செய்தது மிகவும் கடினமான முடிவாக இருந்ததாக அவ்வணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்கள் அனைவரும் சிஎஸ்கே வெற்றிப் பாதையில் உடன் இருந்தவர்கள்.