தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

RCB vs DC: 'அடி மேல் அடி' - 23 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் வீழ்ந்த டெல்லி! - பெங்களூரு 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Banglore won
பெங்களூரு வெற்றி

By

Published : Apr 15, 2023, 7:32 PM IST

பெங்களூரு: 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 20வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி, பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய கோலி, 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கேப்டன் டுபிளெஸ்ஸி 22, லோம்ரோர் 26, மேக்ஸ்வெல் 24 ரன்களில் வெளியேறினர். ஹர்ஷல் படேல் 6, தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினர். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. சபாஸ் அகமது 20, அனுஜ் ராவத் 15 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி அணியை பொறுத்தவரை மிட்செல் மார்ஷ், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்கள், அக்சர் படேல், லலித் யாதவ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

175 ரன்கள் இலக்குடன் டெல்லி அணி ஆட்டத்தை தொடங்கியது. கேப்டன் வார்னர் 19, பிரித்வி ஷா 0, மார்ஷ் 0, யாஷ் டுல் 1, பொரேல் 5 என டெல்லி அணியின் விக்கெட்கள் மளமளவென சரிந்தன. 53 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து அந்த அணி தடுமாறியது. எனினும் மணீஷ் பாண்டே சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசினார். 50 ரன் எடுத்திருந்த போது டிசில்வா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

எனினும் பின்னால் களம் இறங்கிய வீரர்கள் தடுமாறினர். அக்சர் 21, ஹகீம் கான் 18, லலித் யாதவ் 4 ரன்களில் வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. நார்ட்ஜே 23, குல்தீப் யாதவ் 7 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

பந்துவீச்சை பொறுத்தவரை பெங்களூரு அணியில் விஜய்குமார் விஷாக் 3 விக்கெட்களை வீழத்தினார். சிராஜ் 2, பார்னல், ஹசரங்கா, ஹர்ஷல் படேல் தலா ஒரு விக்கெட்களை எடுத்தனர். ஐபிஎல் தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி, 5 ஆட்டங்களிலும் தோல்வி அடைந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details