தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சென்னை சூப்பர் கிங்ஸ் மக்களே... தல தோனி வந்துட்டாப்ல! - CSK news

சென்னை: மார்ச் 11 முதல் சென்னை சூப்பர் கிங்ஸின் அணியின் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்பதற்காக கேப்டன் தோனி சென்னை வந்துள்ளார்.

மார்ச் 11 முதல் சென்னை சூப்பர் கிங்ஸின் ஐ.பி.எல் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்பதற்காக கேப்டன் தோனி சென்னை வருகை .
மார்ச் 11 முதல் சென்னை சூப்பர் கிங்ஸின் ஐ.பி.எல் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்பதற்காக கேப்டன் தோனி சென்னை வருகை .

By

Published : Mar 4, 2021, 12:29 PM IST

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ஏப்ரல் மாதத்திலிருந்து தொடங்குகிறது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14ஆவது ஐபிஎல் சீசனில் தங்களது அணிக்காக புதிய வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட சென்னை வந்துள்ளார் தோனி. இதற்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் மார்ச் 11 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி ஆட்டங்கள் தொடங்கும் எனத் தெரிவித்திருந்தது.

தோனி முதல் நாளிலிருந்தே பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்க முடிவு செய்துள்ளார். தோனி பயிற்சி ஆட்டங்களில் இடம் பெறுவாரா? மாட்டாரா என்று தெரிவிக்காமல் இருந்து வந்த நிலையில், தோனியின் வருகையை ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க...4ஆவது டெஸ்ட்: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்!

ABOUT THE AUTHOR

...view details