டெல்லி : இலங்கை சென்றுள்ள இந்திய அணியில் இடம்பிடித்துள்ள யுஷ்வேந்திர சஹால் மற்றும் கே கௌதம் ஆகியோர் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 27) குர்னால் பாண்ட்யா கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது யுஷ்வேந்திர சஹால் மற்றும் கௌதம் ஆகியோர் கரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, குர்னால் பாண்ட்யாவுடன் தொடர்பில் இருந்த பிரித்வி ஷா, சூர்ய குமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, யுஷ்வேந்திர சஹால், தீபக் சாஹர், மணீஷ் பாண்டே, இஷான் கிஷண் மற்றும் கே கௌதம் ஆகியோர் மருத்துவக் குழுவினரால் கவனிக்கப்பட்டுவந்தனர்.