தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

CSK VS RCB : சென்னை அணியா கொக்கா! பெங்களூருவின் தொடரும் பரிதாபங்கள்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

IPL
IPL

By

Published : Apr 18, 2023, 6:39 AM IST

பெங்களூரு : 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 24 வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை அணியை, பெங்களூரு எதிர்கொண்டது. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளெஸ்சிஸ், சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டிவென் கான்வே சென்னையில் அணியின் இன்னிங்சை தொடக்கி வைத்தனர். அதிரடி ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் இந்த முறை 3 ரன் மட்டும் எடுத்து ஏமாற்றம் அளித்தார். பின்னர் கான்வேவுடன், ரஹானே ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி சென்னை அணியின் ரன் வேகத்தை கூட்டினர்.

ரஹானே 37 ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்து களமிறங்கிய ஷிவம் துபே அதிரடியாக ஆடினார். இதனால் சென்னை அணியின் ரன் ரேட் சீரான இடைவெளியில் உயரத் தொடங்கியது. டிவென் கான்வே தன் பங்குக்கு 45 பந்துகளில் தலா 6 பவுண்டரி மற்றும் சிக்சர் என 83 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

அதேபோல் ஷிவம் துபேவும் 27 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர் என விளாசி 52 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய அம்பதி ராயுடு 14 ரன், ஜடேஜா 10 ரன்களில் வெளியேறினர். கடைசி ஓவரை ஹர்ஷல் படேல் வீசினார். அவர் தொடர்ந்து இரண்டு 'நோ' பால்களை வீசியதால், எஞ்சிய பந்துகளை வீச அனுமதி மறுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மீதமுள்ள 4 பந்துகளை மேக்ஸ்வெல் வீசினார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்களைக் குவித்தது. மொயின் அலி 19, தோனி 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர். பெங்களூரு அணியில் சிராஜ், பர்னல், வைசாக், மேக்ஸ்வெல், ஹசரங்கா, ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

226 ரன்கள் என இமால இலக்கை நோக்கி பெங்களூரு அணி களமிறங்கியது. பெங்களூரு அணியில் கேப்டன் ருபிளெசிஸ்சை தவிர தொடக்க வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. விராட் கோலி 6 ரன், மஹிபால் லோம்ரோர் டக் அவுட் என அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல், கேப்டன் பிளெஸ்சிசுடன் சேர்ந்து மட்டையை சுழற்றத் தொடங்கினார்.

ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டிற்கு அனுப்பி இருவரும் வாண வேடிக்கை காட்டினர். அதிரடியாக ஆடிய 8 சிக்சர் 3 பவுண்டரி விளாசி 76 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் பாப் டு பிளெசிஸ்சும் 62 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து களமிறங்கியவர்களில் தினேஷ் கார்த்திக்கை தவிர மற்ற வீரர்கள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஜொலிக்கவில்லை.

அடுத்தடுத்து விக்கெடுகளை பறிகொடுத்து அணிவகுப்பு நடத்தினர். பெங்களூரு அணியின் நம்பிக்கையாக திகழ்ந்த தினேஷ் கார்த்திக்கும் 28 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். எவ்வளவு போரடியும் பெங்களூரு அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் மட்டுமே அந்த அணி எடுத்தது.

இதன் மூலம் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியில் துஷா தேஷ்பாண்டே 3 விக்கெட்டும், மத்தீஷா பத்திரானா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆகாஷ் சிங், மகேஷ் தேக்‌ஷேனா, மொயின் அலி உள்ளிட்டோர் தலா 1 விக்கெட் மட்டும் வீழ்த்தினர். சென்னை வீரர் டிவென் கான்வாய் ஆட்ட நாயகனக தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் படிங்க :IPL 2023: குஜராத் அணியை துவம்சம் செய்து முதலிடத்திற்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details