தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி - 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி
7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி

By

Published : Apr 29, 2021, 6:09 AM IST

Updated : Apr 29, 2021, 6:20 AM IST

14ஆவது ஐபிஎல் சீசனில் டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின.

டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். இதன்படி ஹைதராபாத் அணியின் சார்பில் டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.

பேர்ஸ்டோவ் 7 (5) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து வார்னருடன், மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி, மெதுவாக ரன்களைச் சேர்த்தது.

மணிஷ் பாண்டே 35 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அவரைத் தொடர்ந்து டேவிட் வார்னரும் 50 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்திசெய்தார். இருப்பினும் அவர் 57 (55) ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக மணிஷ் பாண்டேவும் 61 (46) ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் கேன் வில்லியம்சன் 26 (10) ரன்களும், கேதர் ஜாதவ் 12 (4) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக நிகிடி 2 விக்கெட்டுகளும், சாம் கரண் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் ருதுராஜ் கெய்க்வாட், பாப் டூ பிளஸ்சிஸ் ஆகியோர் முதலாவதாகக் களமிறங்கினர்.

அதிரடியாகத் தொடங்கிய இந்த ஜோடி, அணியின் ரன் ரேட்டை மளமளவென உயர்த்தியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்க்வாட், டூ பிளெஸிஸ் தங்களது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினர்.

தொடர்ந்து அதிரடி காட்டிய கெய்க்வாட் 75 (44) ரன்களில் ரஷித்கான் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலி 15 (8) ரன்களும், அடுத்ததாக டூ பிளஸிஸ் 56 (38) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அதிரடியாக ரன் சேர்த்த சுரேஷ் ரெய்னா 17 (15) ரன்களும், ஜடேஜா 7 (6) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் சென்னை அணி 18.3 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் சேர்த்தது. ஹைதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக ரஷித்கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதையும் படிங்க: ஐபிஎல்: சென்னை அணிக்கு 172 ரன்கள் இலக்கு!

Last Updated : Apr 29, 2021, 6:20 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details