தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் 2021: சென்னை-டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை - chennai vs delhi

மும்பையில் இன்றிரவு நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றனர்.

ipl
ஐபிஎல்

By

Published : Apr 10, 2021, 2:00 PM IST

ஐபிஎல் 2021 டி20 கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை, கடைசி பந்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றிப்பெற்றது.

இந்நிலையில் இன்று, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் இரண்டாவது லீக் ஆட்டத்தில், கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதுகிறது. தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணி வீரர்களும் இன்றைய போட்டியில் அதிரடி காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர், தோள்பட்டை காயம் காரணமாக, ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக, ரிஷப் பண்ட் கேப்டனாக அணியை வழிநடத்த உள்ளார். கேப்டன்ஷிப்பில் பிஹெச்டி முடித்துள்ள தோனியை எதிர்த்து, முதல்முறையாக பண்ட் கேப்டனாக களத்தில் கால் பதிக்கவுள்ளார். இரண்டு அணிகளிலும் சிறப்பான வீரர்கள் உள்ளதால், இன்றைய போட்டியில் சுவாராஸ்யத்திற்கு நிச்சயம் குறைவு இருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 23 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை அணி 15 முறையும், டெல்லி அணி 8 முறையும் வென்றிருக்கின்றன.

இதையும் படிங்க: IPL 2021: வெற்றிக்கணக்குடன் தொடங்கியது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details