தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

"எனக்கு என்டே கிடையாது" - ஓய்வுகுறித்து டோனி கொடுத்த விளக்கம்! - 2011 world cup

நடப்பு ஐபிஎல் சீசனுடன் டோனி ஓய்வுபெற உள்ளதாக கூறப்படும் நிலையில் அது குறித்து அவரே விளக்கமளித்து உள்ளார்.

Dhoni
Dhoni

By

Published : May 4, 2023, 6:07 PM IST

ஹைதராபாத் :டோனி... இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாக ரசிகர்களால் பார்க்கப்படுபவர். கபில் தேவ், சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, சச்சின் தெண்டுல்கர், வீரேந்தர் சேவாக், கம்பீர், ராகுல் டிராவிட், யுவராஜ் சிங் என ஏலம் விட்டுக்கொண்டு இருந்த கிரிக்கெட் ரசிகர்களை குறுகிய காலத்தில் தன் பக்கம் இழுத்த பெருமை டோனிக்கு உண்டு.

இந்திய அணிக்காக உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராஃபி என அடுத்தடுத்து வென்று கொடுத்த பெருமை டோனியைச் சேரும். ''கூல் கேப்டன்'' என அழைக்கப்படும் டோனியை மைதானத்தில் காண ஆயிரம் ஆயிரம் ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். சர்வதேச கிரிக்கெட்டுக்கு டோனி முற்றுப்புள்ளி வைத்தாலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

சென்னை அணியின் தத்துப்பிள்ளையாகவே காணப்படும் டோனியின் ஆட்டத்தை நேரில் காண ஆயிரக்கணக்கிலான ரசிகர்கள் மைதானத்தின் கதவருகிலேயே குடிபெயர்ந்து உள்ளனர். அப்படி டோனியின் தீவிர ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது தான் டோனியின் ரிட்டையர்மென்ட். நடப்பு ஐபிஎல் சீசனுடன் டோனி ஓய்வு பெறுவதாகவும், இதுதான் அவரது கடைசி ஐபிஎல் என்றும் கருதி ரசிகர்கள் சோக வலையைப் பின்னி காணப்படுகின்றனர்.

அப்படி சோகத்தின் மறுஉருவாக காட்சி அளித்த ரசிகர்களுக்கு ஆட்ட நாயகன் டோனி இன்ப அதிர்ச்சி ஒன்றை கடந்த மே 3ஆம் தேதி நடந்த லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் தெரிவித்துள்ளார். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக கிரிக்கெட் வருணனையாளர் டேனி மாரிசனுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி கலந்துரையாடினார். அப்போது, வருணனையாளர் டேனி மாரிசன், உங்களுடைய கடைசி ஐபிஎல் சீசனுக்கு ரசிகர்கள் கொடுக்கும் ஃபேர்வெல் எப்படி இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதில் அளித்த டோனி, "இது என்னுடைய கடைசி ஐபிஎல் என்று நீங்கள் தான் முடிவு எடுத்து இருக்கிறீர்கள். நான் சொல்லவில்லை" எனக் கூறிவிட்டு சிரித்தார். டோனியின் இந்தக் கருத்தைக் கேட்ட ரசிகர்கள் மைதானத்தில் இருந்தபடியே கடும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். அதைத் தொடர்ந்து பேசிய டேனி மாரிசன் அடுத்த ஐபிஎல் போட்டிக்காகவும் டோனி, லக்னோவிற்கு வருவார் என்று கூறினார்.

16ஆவது ஐபிஎல் தொடரில் நேற்று (மே. 3) லக்னோவில் நடந்த 45வது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். லக்னோ அணி 19.2 ஓவருக்கு 7 விக்கெட்டுகள் இழந்து 125 ரன்களை எடுத்து இருந்த நிலையில் திடீரென மழை குறுக்கிட்டது.

மாலை 7 மணி வரை மழைத் தொடர்ந்ததால் ஆட்டம் துவங்குவதற்கு வாய்ப்பே இல்லை எனக் கருதிய நடுவர்கள் போட்டியை ரத்து செய்வதாக அறிவித்தனர். மேலும் லக்னோ, சென்னை அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டன. டோனியின் ஆட்டத்தைக் காண திரண்டு இருந்த ரசிகர்களுக்கு மழை குறுக்கிட்டது பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க :SRH vs KKR: ஹைதராபாத் அணியுடன் பலப்பரீட்சை.. பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்குமா கொல்கத்தா?

ABOUT THE AUTHOR

...view details