மும்பை: நேற்று (ஏப்.19) நடந்த ஐபிஎல் தொடரின் 12ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
நேற்றைய போட்டியானது, ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனிக்கு கேப்டனாக 200ஆவது போட்டியாகும். இந்த போட்டியின் வெற்றிக்கு பிறகு தோனி கூறியதாவது," நாம் விளையாடும்போது, முழு உடற்தகுதியுடன் ஆடவே விரும்புவோம். எல்லா போட்டிகளிலும் ரன்களை குவிப்போம் என்பதில் எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது. நான் 24 வயதிலேயே எனது ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்காதபட்சத்தில், 40 வயதில் மட்டும் எப்படி என்னால் அதற்கு உத்தரவாதம் அளிக்க முடியும்.