ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தற்போது நடைபெற்றுவருகிறது. அதில் டெல்லி அணி ஆடிய ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது.
ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய அஸ்வின்! - டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்
சென்னை: கரோனா வைரசுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடிவரும் நிலையில், ஐபிஎல் தொடரிலிருந்து தான் விலகுவதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
Ashwin
இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா வைரசுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடிவரும் நிலையில், இந்த நேரத்தில் அவர்களுடன் இருப்பது அவசியம்.
அனைத்தும் சரியான திசையில் சென்றால் நான் மீண்டும் அணியில் சேர்வேன் என எதிர்பார்க்கிறேன். நன்றி டெல்லி கேப்பிட்டல்ஸ்" எனப் பதிவிட்டுள்ளார்.