சென்னை: ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு விருப்பம் தெரிவித்து 1097 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் 56, ஆஸ்திரேலியா 42, தென் ஆப்பரிக்கா வீரர்கள் 38 பேர் பதிவு செய்துள்ளனர்.
ஐபிஎல் விளையாடுவதற்கான வீரர்கள் பதிவு நேற்றுடன் (பிப். 4) முடிந்தது. இதில், 21 இந்திய வீரர்கள் உள்பட 207 சர்வதேச வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இணை நாடுகளைச் சேர்ந்த 27 வீரர்கள், ஐபிஎல் விளையாடாத 863 வீரர்கள் என மொத்தம் ஆயிரத்து 97 வீரர்கள் வரும் ஐபிஎல் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளனர்.
ஐபிஎல் தொடரில் அறிமுக வீரர்களால பதிவு செய்யப்பட்ட 863 வீரர்களில், 743 இந்தியா வீரர்கள் மற்றும் 68 வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர். இந்தப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கரும் உள்ளார்.
ஒவ்வொரு அணிக்கும் தங்களது மொத்தம் 25 வீரர்கள் என்ற கணக்கில், தற்போதுள்ள வீரர்கள போக 61 வீரர்களே ஏலம் எடுக்கப்படுவார்கள் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று முடிந்த மறுநாள் வீரர்களுக்கான ஏலம் சென்னையில் மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது.
தற்போது நடைபெறவிருக்கும் ஏலத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அதிகபட்சமாக ரூ. 53.20 கோடி ஏலத் தொகையாக வைத்துள்ளது. இதைத்தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரூ. 35.90 கோடி, ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 34.85 கோடி, சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 22.90 கோடி, மும்பை இந்தியனஸ் ரூ. 15.35 கோடி, டெல்லி கேபிடல்ஸ் ரூ. 12.9 கோடி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைஸர்ஸ் ஆகிய இரு அணிகளும் தலா ரூ. 10.75 கோடி ஏலத் தொகையாக வைத்துள்ளன.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடர் கடந்த ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டில் இந்தியாவில் தொடர் நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
மொத்தம் பதிவு செய்துள்ள 283 வெளிநாட்டு வீரர்களின் விவரம் பின்வருமாறு:
வெஸ்ட் இண்டீஸ் - 56
ஆஸ்திரேலியா - 42
தென் ஆப்பரிக்கா - 38
இலங்கை - 31