தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் 2022: புதிதாக களமிறங்கும் லக்னோ அணியின் பெயர் தெரியுமா? - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக்கில் புதிதாக களமிறங்க உள்ள லக்னோ அணிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

Lucknow Super Giants
Lucknow Super Giants

By

Published : Jan 25, 2022, 9:20 AM IST

லக்னோ: இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 15ஆவது சீசன் இந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்தது. இந்த சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக களமிறங்க உள்ளன.

அதன்படி மொத்தம் பத்து அணிகள் ஐபிஎல் 2022இல் இடம்பெற்றுள்ளன. லக்னோ அணியை ஆர்பி சஞ்சீவ் கோயங்கா குழுமமும், அகமதாபாத் அணியை சிவிசி கேபிடள் பார்ட்னர்ஸ் நிறுவனமும் பெரும் தொகைக்கு வாங்கியது. முன்னதாக லக்னோ அணியின் ஆலோசகராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டார்.

ஐபிஎல் அணிகளுக்கான மெகா ஏலம் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக, லக்னோ அணி தேர்வு செய்துள்ள வீரர்களின் பட்டியலை சனிக்கிழமை வெளியிட்டது. அதில், கே.எல் ராகுலை ரூ. 17 கோடிக்கும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ரூ. 9.2 கோடிக்கும், ரவி பிஷ்னாய் ரூ. 4 கோடிக்கும் தேர்வு செய்யப்பட்டனர். கே.எல் ராகுல் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கோயங்கா குழுமம் லக்னோ அணியின் பெயரை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் என்று அறிவித்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் வீரர்களின் பதிவு ஜனவரி 20ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 1,214 வீரர்கள். இதில் 896 இந்திய வீரர்கள், 318 வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:இந்திய அணி சிறப்பாக விளையாடவில்லை; ராகுல் டிராவிட்

ABOUT THE AUTHOR

...view details