துபாய்: ஐபிஎல் தொடரின் 17வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்காக ஏற்கனவே வீரர்கள் தக்கவைத்துக் கொள்வதும், விடுவித்துக் கொள்வதுமான டிரேட் முறை நடைபெற்றது. இதில் கடந்த 2 சீசன்களில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியவை, மும்பை இந்தியன்ஸ் அணி டிரேட் செய்து கொண்டது. இதேபோல், கேமரூன் கிரீன் மும்பை அணியில் இருந்து பெங்களூரு அணிக்கு தாவியது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் அணியால் டிரேட் செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியா, அந்த அணிக்கு கேப்டனாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். இந்நிலையில், 2024 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் இன்று (டிச.19) நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலிய அணியின் இடக்கை பேட்டரான டிராவிஸ் ஹெட்-ஐ, 6.80 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் வாங்கியுள்ளது.