துபாய்: இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே ஒவ்வொரு அணியிலும் வீரர்களை தக்கவைத்து கொள்வதும், விடுவிப்பதுமான டிரேட் முறை நடந்தது.
இதில் சில முக்கிய வீரர்களான ஹர்திக் பாண்டியா, கேமரூன் கிரீன் ஆகியோர் மாற்றிக் கொள்ளப்பட்டனர். இந்நிலையில், 2024 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் உள்ள பிரபல வனிக வளாகத்தில் நடைபெற்று வருகின்றது. இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு தொடங்கியது. இந்த நிலையில், இந்திய மற்றும் சவுராஷ்டிரா வேகப்பந்து வீச்சாளரான ஜெய்தேவ் உனட்கட்டை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 1.60 கோடிக்கு வாங்கி உள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜெய்தேவ் உனட்கட் ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்; "சன் ரைசர்ஸ் அணியில் ஒரு பகுதியாக இணைவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இந்த ஏலம் நன்றாக அமைந்துள்ளது. இது எனது வாழ்க்கையில் ஒரு புதிய கட்டம். நாங்கள் வர இருக்கும் சீசனில் கோப்பையை வெல்வோம் என நம்புகிறேன்" என்றார்.