தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பெங்களூரு அணியில் இருந்த ஹர்ஷல் படேலை ரூ.11.75 கோடிக்கு வாங்கிய பஞ்சாப் அணி! - பிரீதி ஜிந்தா

Harshal Patel: 2024 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் நடைபெற்று வரும் நிலையில், ஹர்ஷல் படேல் 11.75 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

Harshal patel
Harshal patel

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2023, 5:52 PM IST

துபாய்: ஐபிஎல் தொடருக்கான 17வது சீசன், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஒவ்வொரு அணியில் உள்ள வீரர்களையும் தக்கவைத்துக் கொள்வது, விடுவித்துக் கொள்வதுமான டிரேட் முறையில் வீரர்கள் பரிமாற்றம் ஆகியவை ஏற்கனவே நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில், இன்று (டிச.19) இத்தொடருக்கான மினி ஏலம் துபாயில் உள்ள ஒரு பிரபல வணிக வாளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 214 இந்திய வீரர்கள், 119 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 333 வீரர்கள் பங்கேற்று உள்ளனர். இந்திய நேரப்படி, இந்த மினி ஏலமானது மதியம் 1 மணிக்கு தொடங்கியது.

இந்நிலையில், கடந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விளையாடி வந்த ஹர்ஷல் படேல், தற்போது இந்த மினி ஏலத்தின் மூலம் பஞ்சாப் அணிக்குச் சென்றுள்ளார். இவர் 11.75 கோடிக்கு அந்த அணியால் வாங்கப்பட்டார். ஆரம்ப விலையாக 2 கோடி நிர்ணயிக்கப்பட்டது. மேலும், இவர் இந்திய வீரர்களில் தற்போதைக்கு அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

2018ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர்களில் விளையாடி வரும் இவர், 91 போட்டிகளில் 111 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது சராசரி 24.07ஆக உள்ளது. அதேபோல், 25 சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விளையாடி உள்ள இவர், 29 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை முக்கிய வீரர்களாக மிட்செல் ஸ்டார்க் 24.75 கோடிக்கு கொல்கத்தா அணியாலும், பேட் கம்மின்ஸ் 20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணியாலும் எடுக்கப்பட்டுள்ளனர். மற்ற வீரர்களாக நியூசிலாந்து அணியின் வீரர்கள் டேரில் மிட்செல் 14 கோடிக்கும், ரச்சின் ரவீந்தரா 1.8 கோடிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், டெல்லி அணி இதுவரை இரண்டு வீரர்களை வாங்கியுள்ளது. ஹாரி புரூக் 4 கோடிக்கும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 50 லட்சத்திற்கும் வாங்கப்பட்டுள்ளனர். மேலும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரரான ரோவ்மன் போவல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 7.4 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன ஸ்டார்க்.. எவ்வளவு தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details