ஐபிஎல் 15ஆவது சீசனின் முதல் லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (மார்ச் 26) தொடங்குகிறது. இப்போட்டியில், ஜடேஜா தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.
இப்போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயஸ் பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்:ரூதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா, எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, சிவம் தூபே, மிட்செல் சான்ட்னர், டுவைன் பிராவோ, ஆடம் மில்னே, துஷார் தேஷ்பாண்டே.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: வெங்கடேஷ் ஐயர், அஜிங்கயா ராகானே, ஷ்ரேயஸ் ஐயர், நிதீஷ் ராணா, சாம் பில்லிங்ஸ், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரேன், ஷெல்டன் ஜாக்சன், உமேஷ் யாதவ், சிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி.
இதையும் படிங்க: ஐபிஎல் 2022... புதிய கேப்டன்கள்... சென்னை vs கொல்கத்தா...