தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IPL 2022 Auction: இஷானை அதிக விலை கொடுத்து மீட்டெடுத்தது மும்பை! - IPL auction 2022

இந்திய இடதுகை பேட்ஸ்மேன் இஷான் கிஷனை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 15.25 கோடிக்கு வாங்கியுள்ளது.

Ishan Kishan
Ishan Kishan

By

Published : Feb 12, 2022, 5:46 PM IST

பெங்களூரு: இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலம் இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. பெங்களூரு ஐடிசி கார்டேனியா நட்சத்திர விடுதியில் முதல் நாளான இன்று (பிப். 12) ஏலம் தொடங்கியது.

ஏலத்தின் முதல் பகுதியாக, மார்க்கீ வீரர்கள் எனப்படும் முக்கிய வீரர்கள் முதலில் ஏலம் விடப்பட்டார்கள். அடுத்து, ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள், பேட்ஸ்மேன்கள், ஆல்-ரவுண்டர்கள், பந்துவீச்சாளர்கள் என செட் வாரியாக வீரர்கள் ஏலம் விடப்பட்டனர்.

ஏலம் விட வந்த சாரு சர்மா

இடையே, ஏலம் விட்டுக்கொண்டிருந்த ஹக் எட்மீட்ஸ் மயக்கி கீழே சரிந்தார். இதனால், ஏலம் நிறுத்தப்பட்டது. அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததால் மயக்கம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதையடுத்து, புதிய ஏலம் விடுபவராக சாரு சர்மாவை பிசிசிஐ நியமித்ததை அடுத்து, பிற்பகல் 3.30 மணிக்கு ஏலம் மீண்டும் தொடங்கியது. அதில், ஹசராங்காவை ரூ. 10.75 கோடி கொடுத்து பெங்களூரு அணி மீண்டும் வாங்கியது. பின்னர், பந்துவீச்சாளர்கள் செட்டிற்கு பின் ஆல்-ரவுண்டர்கள் ஏலம் விடப்பட்டனர்.

ஹைதராபாத் vs மும்பை

அந்த செட்டில் இடம்பெற்றிருந்த வாஷிங்டனை ஹைதராபாத் அணியும் (ரூ. 8.75 கோடி), குர்னால் பாண்டியாவை லக்னோ அணியும் (ரூ. 8.25), மிட்செல் மார்ஷை டெல்லி அணியும் (ரூ. 6.50 கோடிக்கு) வாங்கியுள்ளன.

இதையடுத்து விக்கெட் கீப்பர் செட் ஏலம் விடப்பட்டது. அதில் இருந்த ராயுடுவை சென்னை அணியும் (ரூ. 6.25 கோடி), ஜானி பேர்ஸ்டோவை பஞ்சாப் அணியும் (ரூ. 6.75 கோடி), தினேஷ் கார்த்திக்கை பெங்களூரு அணியும் (ரூ. 5.50) எடுத்துள்ளன.

இதனிடையே இந்திய இடதுகை பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான இஷான் கிஷன் ரூ. 15.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விலைபோனார். மும்பை அவரை தக்கவைக்காமல் இவ்வளவு விலை கொடுத்து ஏலம் எடுத்துள்ளது நினைவுக்கூரத்தக்கது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரனை ரூ. 10.75 கோடி கொடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது. விருத்திமான் சாஹா, இங்கிலாந்து விக்கெட் கீப்பர் சாம் பில்லிங்ஸ் ஆகியோரை யாரும் ஏலம் எடுக்கவில்லை.

இதுவரை 37 பேர் ஏலம் விடப்பட்டுள்ள நிலையில், 29 பேர் பல்வேறு அணிகளால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். அதில், 14 பேர் வெளிநாட்டினர். 8 வீரர்கள் ஏலம் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: IPL 2022 AUCTION LIVE UPDATE: இஷானுக்கு அடித்தது ஜாக்-பாட்

ABOUT THE AUTHOR

...view details