தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் 2022: மும்பை, புனேவில் மட்டுமே லீக் ஆட்டங்கள் - ஐபிஎல் 2022 இறுதி போட்டி

ஐபிஎல் 2022ஆம் ஆண்டு சீசனின் 70 லீக் ஆட்டங்களும் மும்பை, புனேவில் உள்ள மைதானங்களில் மட்டுமே நடைபெறுகிறது.

IPL 2022
IPL 2022

By

Published : Feb 25, 2022, 4:13 PM IST

Updated : Feb 25, 2022, 5:54 PM IST

மும்பை:இதுகுறித்து ஐபிஎல் நிர்வாக கவுன்சில் தரப்பிலிருந்து, ஐபிஎல் 2022 15ஆவது சீசன் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதி முடிகிறது. மொத்தம் 70 லீக் போட்டிகள் மும்பை, புனேவில் உள்ள சர்வதேச தர மைதானங்களில் நடக்கும். பிளேஆஃப், இறுதி போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

குறிப்பாக மும்பையின் வான்கடே, டிஒய் பட்டில் மைதானங்களில் தலா 20 ஆட்டங்களும், மும்பையின் பிராபோர்ன், புனேவின் எம்சிஏ மைதானங்களில் தலா 15 ஆட்டங்களும் நடக்கும். இதற்காக வழக்கம்போல் 10 அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

குரூப் ஏ: மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

குரூப் பி: சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ்.

மும்பை, புனேவில் மட்டுமே 70 லீக் ஆட்டங்கள் நடப்பதால், சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா போன்ற முக்கிய அணி ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஐபிஎல் 2021 14ஆவது சீசனும் அரபு அமீரகத்தில் நடைபெற்றது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க:IND vs SL 2nd T20: இந்தியாவின் அடுத்த வைட் வாஷ் இலங்கை?

Last Updated : Feb 25, 2022, 5:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details