தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வெல்வதற்காக தான் ஆடினோம், ரன் ரேட்டுக்காக அல்ல: ஸ்ரேயாஸ் ஐயர் - ஐபிஎல் 2020

அபுதாபி: பெங்களூரு அணிக்கு எதிரான வாழ்வா சாவா ஆட்டத்தில், நாங்கள் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஆடினோமே தவிர்த்து ரன் ரேட்டை காப்பாற்றுவதற்காக ஆடவில்லை என டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

we-focused-on-the-win-not-on-net-run-rate-says-iyer
we-focused-on-the-win-not-on-net-run-rate-says-iyer

By

Published : Nov 3, 2020, 3:59 PM IST

நேற்று (நவ. 2) நடந்த டெல்லி - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில், டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனால் டெல்லி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியதோடு, புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் நிறைவு செய்தது. அதேபோல் ஆர்சிபி அணியும் ரன் ரேட் அடிப்படையில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

இதைப்பற்றி டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறுகையில், ''இந்த பெர்ஃபாமன்ஸ் நிறைவளிக்கிறது. இந்தப் போட்டி எங்களுக்கு வாழ்வா சாவா போட்டி என்று தெரியும். அதனால் வெற்றிபெறும் நோக்கத்தில் தான் ஆடினோமே தவிர்த்து, ரன் ரேட்டிற்காக ஆடவில்லை. ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் கீழ் இருந்த அணிகள் அடைந்த வெற்றிகளால், தொடர் மிகவும் பரபரப்பாக மாறியது. எங்கள் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற திட்டம் நன்றாகத் தெரியும். அதனை சரியாகவும் செயல்படுத்தி வருகிறார்கள்.

நாங்கள் எங்களின் ஓய்வறையில் ஆர்சிபி அணியின் பலம், பலவீனம் பற்றி ஆலோசித்தோம். அதை சரியாக செயல்படுத்தியுள்ளோம். இந்தத் தொடரின் மிகச்சிறந்த அணி மும்பை தான். அவர்களை வீழ்த்துவதற்கு நாங்கள் அடிப்படையை சரியாக செயல்படுத்த வேண்டும்'' என்றார்.

இதையும் படிங்க:மகளிர் டி20 சேலஞ்ச் : 7 புதிய எமோஜிக்களை வெளியிட்ட ட்விட்டர் இந்தியா, பிசிசிஐ!

ABOUT THE AUTHOR

...view details