தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் தொடரில் கோலிக்கு ’சிங்கிள்ஸ்’னா, வார்னருக்கு ’பவுண்டரி’! - வார்னர் vs விராட் கோலி

2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி பெரும்பாலான ரன்களை ஓடியே எடுத்துள்ளார் என்றால், மறுமுனையில் ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர் பெரும்பாலான ரன்களை பவுண்டரிகளிலேயே எடுத்துள்ளார்.

warner-scored-runs-in-boundaries-kohli-in-singles
warner-scored-runs-in-boundaries-kohli-in-singles

By

Published : Nov 6, 2020, 4:32 PM IST

2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் முதல் எலிமினேட்டர் போட்டி இன்று (நவ.06) இரவு நடைபெற உள்ளது. இதில் பெங்களூரு-ஹைதராபாத் அணிகள் விளையாட உள்ளன. இந்தப் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற உள்ளதால் பிட்ச்சின் தன்மை ரன்கள் சேர்க்கக் கடினமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இன்று இரவு இப்போட்டி நடைபெற உள்ள நிலையில், தற்போது ஒரு சுவாரஸ்யமானத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி 65.66 சதவிகித ரன்களை ஓடியே எடுத்துள்ளார். ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் 53 சதவிகித ரன்களை பவுண்டரிகளிலேயே அடித்துள்ளார் எனத் தற்போது தெரியவந்துள்ளது.

விராட் கோலி

விராட் கோலி ’சிங்கிள்ஸ்’களிலேயே ரன்கள் எடுப்பதால், ஹைதராபாத் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் ரஷீத் கான் ஓவரில் எளிதாக ரன்கள் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணி கேப்டன்களின் ஆட்டத்தைப் பொறுத்தே வெற்றி தீர்மானிக்கப்படும் என்பதால், யார் சிறப்பாக ஆடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

வார்னர்

இதையும் படிங்க:ஐபிஎல் 2020: 460 ரன்களில் 302 ரன்களை ஓடி எடுத்த விராட் கோலி!

ABOUT THE AUTHOR

...view details