கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டு, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இத்தொடரில் இன்று (அக்.3) நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஸ்டீவ் ஸ்மித் தலமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் ஆர்சிபி அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி 72 ரன்களை விளாசி அணியின் வெற்றிக்கு உதவினார்.