மகளிர் டி20 சேலஞ்ச் தொடரின் முதல் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான சூப்பர்நோவாஸ் அணியை எதிர்த்து மிதாலி ராஜ் தலைமையிலான வெலாசிட்டி அணி மோதுகிறது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெலாசிட்டி அணி கேப்டன் மிதாலி ராஜ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் முதல்முறையாக களமிறங்குவதால், இந்தத் தொடர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெலாசிட்டி அணி விவரம்: ஷஃபாலி வர்மா, டேனியலி வியாட், மிதாலி ராஜ் (கேப்டன்), வேதா கிருஷ்ணமூர்த்தி, சுஷ்மா வர்மா, சுனே லூஸ், மணலி தக்ஷினி, ஷிகா ஏக்தா பிஷ்த், லெய்க் காஸ்பெரிக், ஜஹனரா ஆலம்.
சூப்பர்நோவாஸ் அணி விவரம்: ப்ரியா புனியா, சமாரி அட்டப்பட்டு, ஜெமிமா ரோட்டிரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), சசிகலா சிரிவர்தனே, தானியா பாட்டியா, பூஜா, ராதா யாதவ், பூனம் யாதவ், சகீரா, அயபோங்கா.
இதையும் படிங்க:எனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தேசிய முகாமிலிருந்து வெளியேறுவேன்: அமித் பங்கல்