ஐபிஎல் டி20 போட்டிகளின் ப்ளே ஆஃப் போட்டிகளுக்கு நடுவே மகளிருக்கான டி20 சேலஞ்ச் தொடர் நடக்கவுள்ளது. வெலாசிட்டி, சூப்பர்நோவாஸ், ட்ரையல்ப்ளேசர்ஸ் என மூன்று அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், அவற்றின் எமோஜிக்களை ட்விட்டர் இந்தியாவுடன் இணைந்து பிசிசிஐ விளம்பரப்படுத்தியுள்ளது.
இதன்மூலம் ரசிகர்கள் #MithaliRaj or #Mithali, #Harmanpreet or #Harman, #Smriti or #SM18, #WomensT20Challenge, #Velocity, #Supernovas, and #Trailblazers என்ற ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி ட்வீட்களில் பதிவிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.