மகளிர் டி20 சேலஞ்ச் தொடரில் இறுதிப்போட்டியில் ட்ரையல்ப்ளேசர்ஸ் அணியை எதிர்த்து சூப்பர்நோவாஸ் அணி விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற சூப்பர்நோவாஸ் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பந்துவீச்சைத் தேர்வுசெய்துள்ளார்.
இரண்டு முறை மகளிர் டி20 சேலஞ்ச் கோப்பையைக் கைப்பற்றிய, சூப்பர்நோவாஸ் அணி மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மறுமுனையில் முதல்முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்போடு ட்ரையல்ப்ளேசர்ஸ் அணி களமிறங்கியுள்ளது. இதனால் இந்த இறுதிப்போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.