2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர், பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
இதனால் ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது. இதில் தோல்வியடையும் அணி தொடரிலிருந்து வெளியேறும் என்பதால், இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் ஹைதராபாத் அணியின் முக்கிய வீரர் சஹா காயமடைந்துள்ளதால், இளம் வீரர் ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி இப்போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார்.