ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் நேற்று (அக்.01) நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதின.
இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. மேலும் இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி ஆறு ஓவர்களில் 106 ரன்களை விளாசியிருந்தது.
இதையடுத்து ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சு ஆலோசகரும், முன்னாள் சுழற்பந்துவீச்சு ஜாம்பவானுமான ஷேன் வார்னே, டி20 கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்காக சில வழிமுறைகளை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘டி 20 கிரிக்கெட் போட்டிகளை மேம்படுத்துவதற்கான சில வழிமுறைகள். 1) மிகப்பெரிய பவுண்டரிகளை கொண்ட மைதானங்கள். 2) பந்துவீச்சர்கள் அதிக பட்சம் ஐந்து ஓவர்களை வீச வேண்டும். 3) போட்டியின் பிட்ச், 4 நால் டெஸ்ட் போட்டிகளின் பிட்ச்சைப் போன்று ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த தோனி!