தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஒருவிதத்தில் ஒரு வருட தடையும் நல்லது தான்: ஷகிப் அல் ஹசன்

ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவினரால் விதிக்கப்பட்ட ஒரு வருடத் தடையும் ஒரு விதத்தில் நல்லதுதான் என வங்கதேச ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.

shakib-al-hasan-calls-his-ban-a-blessing-in-disguise-prepared-to-be-doubted-by-teammates
shakib-al-hasan-calls-his-ban-a-blessing-in-disguise-prepared-to-be-doubted-by-teammates

By

Published : Nov 5, 2020, 5:07 PM IST

சூதாட்ட புரோக்கர்கள் அணுகியதை சரியாக ஐசிசியிடம் தெரிவிக்காத வங்கதேச ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடைக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், நவ.9ஆம் தேதிக்கு நடக்கவுள்ள உடல் தகுதி சோதனையில் பங்கேற்பதற்காக ஷகிப் அல் ஹசன் தயாராகி வருகிறார்.

இந்தத் தடைக்காலம் பற்றி ஷகிப் பேசுகையில், ''இந்தத் தடைக்காலம் எனக்கு உதவியாக இருந்தது என்று கூறலாம். நான் வாழ்க்கையை அணுகும் முறை மாறியுள்ளது. அதனால் இந்தத் தடைக்காலத்தை நல்லது என்ற விதத்தில் பார்க்கலாம்.

எனது மூளையில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்று எனக்கும் தெரியவில்லை. என் அணி வீரர்களுக்கு என்மீது சந்தேகம் வரலாம். நான் அவர்களுடன் தொடர்ந்து பேசி வந்துள்ளேன். அவர்கள் என்னை சந்தேகிப்பார்கள் என நினைக்கவில்லை. ஆனால் மற்றவர்களின் மூளைக்குள் என்ன இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாது.

ஷகிப் அல் ஹசன்

ரசிகர்கள் எனக்கு கொடுத்த ஆதரவுக்கு என்ன கைமாறு செய்ய போகிறேன் என தெரியவில்லை. நான் மீண்டும் கிரிக்கெட் ஆடும்போது அவர்களுக்காக இன்னும் அதிக வெற்றிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என தோன்றுகிறது. உலகக்கோப்பைத் தொடருக்கு முன்னதாகவே நான் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். உலகக்கோப்பைத் தொடரின்போது நான் விசாரணைகளுக்கு ஆஜாராகி வந்தேன். ஆனால் அது எதுவும் எனது ஆட்டத்தில் பிரச்னை ஏற்படுத்தவில்லை'' என்றார்.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020: 460 ரன்களில் 302 ரன்களை ஓடி எடுத்த விராட் கோலி!

ABOUT THE AUTHOR

...view details