ஐபிஎல் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாகத் தொடங்கி, நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று (செப்.24) நடைபெறும் ஆறாவது லீக் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதற்கு முன்னதாக இவ்விரு அணிகளும் மோதிய 24 போட்டிகளில், இரு அணிகளும் தலா 12 முறை வெற்றியைப் பெற்றுள்ளன. அதனால் இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற பரபரப்பு ரசிகர்களிடம் தொற்றிக்கொண்டுள்ளது.