ஐபிஎல் தொடரின் 55ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி - பெங்களூரு அணிகள் ஆடிவருகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார்.
இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால், இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
பெங்களூரு அணிக்காக படிக்கல் - ஜோஷ் பிலிப் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இந்த இணை நிதானமாக ஆடிவந்த நிலையில், ரபாடா வீசிய முதல் ஓவரில் பிலிப் 12 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் படிக்கல் - கேப்டன் விராட் இணை சேர்ந்தது.
2 விக்கெட்டுகள் வீழ்த்திய ரபாடா இந்த இணையும் பவுண்டரிகள் அடிக்க எடுத்த முயற்சிகளை சரியான ஃபீல்டிங் மூலம் டெல்லி வீரர்கள் தடுத்தனர். பவர் ப்ளே ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 40 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. தொடர்ந்து ஓவருக்கு 6 ரன்கள் வீதம் டெல்லி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தினர். இடையே விராட் கோலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை நார்கியே தவறவிட, ஆட்டம் விறுவிறுப்பானது.
அதன் பின்னர் அதிரடி ஆட்டத்திற்கு மாறிய கோலி, அக்சர் படேல் ஓவரில் சிக்சர் அடித்து அசத்தினார். ஆனால் அடுத்த ஓவரிலேயே அஸ்வின் பந்தில் பவுண்டரி அடிக்க நினைத்து 29 ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
கோலி விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின் இதனைத்தொடர்ந்து படிக்கல் - டி வில்லியர்ஸ் இணை சேர்ந்து ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பாக ஆடிய படிக்கல் இந்தத் தொடரின் 4ஆவது அரைசதத்தை பூர்த்திசெய்தார். 15 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 2 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் சேர்த்திருந்தது.
இதனால் கடைசி 5 ஓவர்களில் அதிகமாக ரன்கள் சேர்க்க வேண்டும் என்பதால், அடுத்த ஓவரிலேயே டி வில்லியர்ஸ் சிக்சர் அடித்து தொடங்கினார். ஆனால் 16ஆவது ஓவரில் செட் பேட்ஸ்மேன் படிக்கல் 50 ரன்களிலும், புதிதாக வந்த மோரிஸ் ரன் ஏதும் எடுக்காமலும் நார்கியே பந்தில் வெளியேறினர்.
இதனைத்தொடர்ந்து சாம்ஸ் வீசிய 18ஆவது ஓவரில் தூபே அதிரடியாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாச, அந்த ஓவரில் 17 ரன்கள் சேர்க்கப்பட்டது. 19ஆவது ஓவரை வீச ரபாடா அழைக்கப்பட்டார்.
அந்த ஓவரின் முதல் பந்தை டி வில்லியர்ஸ் சிக்சருக்கு அனுப்ப, பதிலுக்கு ஒரு பவுண்டரி விளாசிய தூபே கடைசி பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். 10 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்து தூபே வெளியேற, கடைசி ஓவரை வீசுவதற்கு மீண்டும் நார்கியே அழைக்கப்பட்டார்.
அந்த ஓவரின் முதல் பந்தில் டி வில்லியர்ஸ் 35 ரன்களில் ரன் அவுட்டாக, 3ஆவது பந்தில் உடானா பவுண்டரி அடித்து பெங்களூரு அணி 150 ரன்களை எட்ட உதவினார். நான்காவது பந்தில் உடானாவும் ஆட்டமிழக்க, இறுதியாக பெங்களூரு அணி 20 ஓவர்களில் 152 ரன்களை எடுத்தது.
இதையும் படிங்க:#ThankYouWatson ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்த ஷேன் வாட்சன்!