தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

எங்கள் திட்டத்திற்கும், செயல்பாட்டிற்கு துளியும் சம்பந்தமில்லை: கோபமான ரிக்கி பாண்டிங்

துபாய்: மும்பை அணிக்கு எதிரான குவாலிஃபயர் சுற்று போட்டியில் நாங்கள் செய்த திட்டமிடலுக்கும், அணியின் செயல்பாட்டிற்கும் சம்பந்தமில்லாத அளவிற்கு செயல்பட்டுள்ளோம் என டெல்லி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

our-execution-was-miles-off-delhi-capitals-coach-ponting-after-first-qualifier
our-execution-was-miles-off-delhi-capitals-coach-ponting-after-first-qualifier

By

Published : Nov 6, 2020, 4:26 PM IST

டெல்லி அணிக்கு எதிரான குவாலிஃபயர் சுற்றின் முதல் போட்டியில் மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று, ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

பும்ரா யார்க்கரில் போல்டான தவான்

டெல்லி அணியின் தோல்விக்கு பின்னர் அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''16 ஓவர்களில் 120 ரன்கள் எடுத்திருந்ததால், மும்பை அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயிக்கும் என எதிர்பார்த்தோம்.

ஆனால் நாங்கள் நினைத்ததற்கும், கடைசி நான்கு ஓவர்களுக்கும் துளியும் சம்பந்தமில்லை. எங்கே இருக்க வேண்டும் என நினைத்தோமோ, அங்கிருந்து பல மைல்கள் தள்ளியிருக்கிறோம்.

ஹர்திக் பாண்டியாவுக்கு எங்கு போட வேண்டும் என கேட்டு பந்துகளை அடிப்பதற்கு ஏதுவாக போட்டுக்கொடுத்தோம். இஷான் கிஷனும் ப்ரஷரில் இருந்து எளிதாக விடுவித்துக்கொண்டார். எங்கள் அணிக்கு எதிராக இஷான் ஆடிய மூன்று போட்டிகளிலும் அவர் சிறப்பாக ஆடியுள்ளார். நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

டெல்லி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்

நாங்கள் நன்றாக திட்டமிட்டிட்ருந்தோம். அணியின் ஆலோசனைக் கூட்டம் என அனைத்தும் சரியாக நடந்தது. ஆனால் அந்தத் திட்டங்களை செயல்படுத்துவதில் கோட்டை விடுகிறோம்.

மும்பை அணி எங்களைவிட பன்மடங்கு சிறப்பாக ஆடியது. ஆட்டத்தின் அனைத்து விஷயங்களிலும் அவர்கள் எங்களைவிட சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அடுத்த ஆட்டத்திற்கு எங்களுக்கு மூன்று நாள்கள் உள்ளது. யார் எதிரணி என்பதை தெரிந்துகொண்டு சரியாக திட்டமிட்டு வெற்றிபெறுவோம்'' என்றார்.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020: 460 ரன்களில் 302 ரன்களை ஓடி எடுத்த விராட் கோலி!

ABOUT THE AUTHOR

...view details