தமிழ்நாடு

tamil nadu

வாய்ப்பைத் தக்க வைக்கும் முனைப்பில் பஞ்சாப்... முதலிடத்தை தக்கவைக்க போராடும் டெல்லி... வெற்றி யாருக்கு?

By

Published : Oct 20, 2020, 4:32 PM IST

ஐபிஎல் தொடரில் இன்று (அக்.20) நடைபெறும் 38ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

Our challenge is to maintain winning habit this IPL, says Kaif
Our challenge is to maintain winning habit this IPL, says Kaif

ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் நாளுக்கு நாள் திருப்பங்களை ஏற்படுத்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது. தொடர் மீதான எதிர்பாரப்பும் பரபரப்பும் உச்சத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், இன்று நடைபெறும் 38ஆவது லீக் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. அதேசமயம் நடப்பு சீசனில் டெல்லி அணி தொடர் வெற்றிகளைக் குவித்துள்ளாதால், தான் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை ஏறத்தாழ உறுதி செய்துள்ளது.

ஆனால் பஞ்சாப் அணியோ, இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

மும்பை அணிகெதிரான கடந்த போட்டியில் இரண்டு சூப்பர் ஓவர்களில் விளையாடி, த்ரில் வெற்றியைப் பெற்ற பஞ்சாப் அணி, வெற்றி பெற்ற திகைப்போடு இன்றைய ஆட்டத்திலும் களமிறங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

கெய்ல், ராகுல், மயங்க், பூரான் என அணியின் அதிரடி வீரர்கள் தங்களது முழுத்திறனையும் வெளிப்படுத்தி வருவதால், பஞ்சாப் அணி மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. இருப்பினும் நட்சத்திர வீரர் மேக்ஸ்வெல்லின் பங்களிப்பு இல்லாததால் அணியின் ஒவ்வோரு வெற்றியும் போராட்டத்திற்குப் பிறகே உறுதியாகிறது.

இதனால் இன்றைய ஆட்டத்தில் அணியில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என ரசிகர்கள் கணித்துள்ளனர். பந்துவீச்சுத் தரப்பில் சூப்பர் ஓவர்களில் அணியைக் காப்பற்றிய கிறிஸ் ஜோர்டன், முகமது ஷமி ஆகியோர், இன்றைய போட்டியிலும் பஞ்சாப் அணிக்கு தங்களது பங்களிப்பை தருவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

கெய்ல் - கே.எல். ராகுல்

அதேசமயம் இளம் வீரர்களான முருகன் அஸ்வின், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் அசத்தலான திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். தனது பாதையில் உள்ள தடைகளை உடைத்தெறிந்து பஞ்சாப் அணி இந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்:

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, நடப்பு சீசனில் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதிக இளம் வீரர்களைக் கொண்ட டெல்லி அணிக்கு பிரித்வி ஷா, ரிஷப் பந்த், ஹெட்மையர் என அனைவரும் நம்பிக்கையளித்து வருகின்றனர்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்

அதிலும் குறிப்பாக சென்னை அணியுடனான போட்டியில், ஷிகர் தவான் சதமடித்து அணியின் பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசமாக்கினார். மார்கஸ் ஸ்டோய்னிஸ், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தொடர்ந்து ஆல்ரவுண்டர் வரிசையில் அணியின் வெற்றியை உறுதிசெய்து வருகின்றனர்.

ஷிகர் தவான்

காகிசோ ரபாடா, ஆண்ட்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் வேகப்பந்துவீச்சில் மிரட்டி வருவதாலும் டெல்லி அணி இந்த சீசனில் தனது அசுர வளர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறது. ஏற்கெனவே பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிபடுத்தியுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்க வைக்கப் போராடும் என்பதில் சந்தேகமில்லை.

உத்தேச அணி:

கிங்ஸ் லெவன் பஞ்சாப் : கிறிஸ் கெய்ல், கே.எல். ராகுல் (கேப்டன்), மயங்க் அகர்வால், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரான், மேக்ஸ்வெல், முருகன் அஸ்வின், முகமது ஷமி, கிறிஸ் ஜோர்டன், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் : ஷிகர் தவான், பிருத்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஷிம்ரான் ஹெட்மையர், ரிஷப் பந்த், மார்கஸ் ஸ்டோனிஸ், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், அன்ரிச் நோர்ட்ஜே, துஷார் தேஷ்பாண்டே, ககிசோ ரபாடா.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020: சென்னையை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது ராஜஸ்தான்!

ABOUT THE AUTHOR

...view details