ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டத்தொடங்கிவிட்டன. இதில் இன்று (அக்டோபர் 24) நடைபெற்று வரும் 42ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா - டெல்லி அணிகள் பலப்பரீட்சை நத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு நிதீஷ் ராணா, சுனில் நரைன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினர்.
இதன் மூலம் கேகேஆர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ராணா 81 ரன்களையும், சுனில் நரைன் 63 ரன்களை எடுத்தனர்.
இந்நிலையில், நிதீஷ் ராணாவின் மாமனார் சுரிந்தர் மர்வா, புற்றுநோய் காரணமாக நேற்று (அக்டோபர் 23) காலமானார். இதனால் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மாமனாரின் பெயர் பதித்த ஜெர்சியை மைதானத்தில் காட்டி நிதீஷ் ராணா அஞ்சலி செலுத்தினார்.
இதனை கேகேஆர் அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பதிவில், “காலமான மாமனார் சுரிந்தர் மர்வாவிற்கு நிதீஷ் ராணா தனது இதயம் கனிந்த அஞ்சலியை செலுத்துகிறார்” எனப் பதிவிட்டு, அவர் அஞ்சலில் செலுத்தும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது. இப்பதிவு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:கபில் தேவ் விரைந்து குணமடைய வாழ்த்தும் கிரிக்கெட் உலகம்!