தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டாஸ் வென்ற மும்பை கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சு தேர்வு! - மும்பை பேட்டிங்

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

ipl-13-csk-vs-mi-toss-report
ipl-13-csk-vs-mi-toss-report

By

Published : Oct 23, 2020, 7:05 PM IST

Updated : Oct 23, 2020, 7:13 PM IST

ஐபிஎல் தொடரின் 41ஆவது லீக் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் ஷார்ஜா மைதானத்தில் விளையாடுகின்றன.

இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

காயம் காரணமாக ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக பொல்லார்ட் கேப்டனாக செயல்படவுள்ளார்.

இந்த ஒரு அணிகள் மோதிய முந்தைய போட்டியில் சிஎஸ்கே அணி வென்றுள்ளதால், இன்றையப் போட்டியில் பதிலடி கொடுக்க மும்பை அணி காத்திருக்கிறது. அதுபோக இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு செல்லும்.

இந்தப் போட்டியில் தோல்வியடைந்தால் சென்னை அணி முழுமையாக தொடரைவிட்டு வெளியேறும். கடந்தப் போட்டியின் இறுதியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என கூறிய தோனி, இன்றையப் போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார்.

சென்னை அணி விவரம்:தோனி (கேப்டன்), சாம் கரண், டூ ப்ளஸிஸ், ராயுடு, ஜகதீசன், கெய்க்வாட், ஜடேஜா, தீபக் சாஹர், தாகூர், ஹெசல்வுட், தாஹிர்.

மும்பை அணி விவரம்: பொல்லார்ட் (கேப்டன்), டி காக், சவுரப் திவாரி, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, குர்ணால் பாண்டியா, கவுல்டர் நைல், ராகுல் சாஹர், போல்ட், பும்ரா.

இதையும் படிங்க:“நிறைய பேருக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம், ஆனால் எங்களுக்கு நம்பிக்கை உண்டு”- கோலி

Last Updated : Oct 23, 2020, 7:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details