ஐபிஎல் தொடரின் 45ஆவது லீக் ஆட்டத்தில் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது
அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இன்றைய ஆட்டத்தி வெற்றி பெற்றால் மட்டுமே ராஜஸ்தான் அணியால் பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.