சென்னை - மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
பின்னர் களமிறங்கிய சென்னை அணியில் டாப் ஆர்டர் சொதப்பிதால், 20 ஓவர்கள் முடிவில் 114 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாம் கரண் 52 ரன்கள் எடுத்தார்.
பின்னர் 115 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு டி காக் - இஷான் கிஷன் இணை தொடக்கம் கொடுத்தது.
இந்த இணை தொடக்கத்தில் நிதானமாக ஆடிய நிலையில், நான்காவது ஓவருக்கு பின் விஸ்வரூபம் எடுத்தது. தீபக் சாஹர் வீசிய 5ஆவது ஓவரில் 17 ரன்கள் எடுத்த நிலையில், தொடர்ந்து அதிரடியாக ஆடியது.
டி காக் ஒருமுனையில் சிங்கிள்களாக எடுக்க, மறுமுனையில் இஷான் கிஷன் 10 ஓவரில் ஆட்டத்தை முடிக்க வேண்டும் என்ற கணக்கோடு மிரட்டிக் கொண்டு இருந்தார். இதனால் 29 பந்துகளிலேயே ரிவர்ஸ் ஸ்வீப் சிக்சருடன் அரைசதம் கடந்தார். 10 ஓவர்கள் முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 98 ரன்கள் எடுத்தது.
பின்னர் அடுத்த ஓவரில் 10 ரன்கள் சேர்க்க, மும்பை அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இறுதியாக மும்பை அணி 12.2 ஓவர்களில் இலக்கை எட்டியது.
இஷான் கிஷன் 37 பந்துகளில் 68 ரன்களும், டி காக் 46 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியது.
இதையும் படிங்க:தொடர்ந்து சிஎஸ்கே அணிக்கு ஆதரவு தாருங்கள் - ரசிகர்களுக்கு பிராவோ வேண்டுகோள்