ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 15ஆவது லீக் ஆட்டத்தில், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடியது.
இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த இளம் வீரர்கள் மஹிபால் லமோர் - ரியான் பராக் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின்னர் அதிரடியாக விளையாடி வந்த லமோர், அரை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 47 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.