பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் நேற்று (செப்.19) முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்து, மும்பை இந்தியன்ஸ் அணியை 162 ரன்களுக்குள் சுருட்டியது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய சிஎஸ்கேவிற்கு அம்பத்தி ராயுடு, பாப் டூ ப்ளெசிஸ் இணை அதிரடியாக விளையாடி வெற்றியைப் தேடி கொடுத்தது. இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.
முன்னதாக கடந்தாண்டு உலகக்கோப்பைத் தொடருக்கு பின் எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்து வந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இந்தாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்.