ஐபிஎல் தொடரின் 32ஆவது லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் இயன் மோர்கன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதையடுத்து 149 என்ற எளிய இலக்கை துரத்திய மும்பை அணிக்கு ரோஹித் - டி காக் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இந்த இணை தொடக்கம் முதலே அதிரடியாக ஆட, பவர் ப்ளே ஓவர்களில் முடிவில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்களை எடுத்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய இந்த இணையை பிரிக்க முடியாமல் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் திணறினர். இதனால் 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி மும்பை அணி 90 ரன்கள் எடுத்தது.