ஐபிஎல் தொடர் முடிவடைந்ததற்கு பின்னர் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்யவுள்ளது. நவ.27ஆம் தொடங்கும் கிரிக்கெட் தொடர் ஜன.19ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
ஆஸ்திரேலிய தொடர் தொடங்குவதற்கு முன்னதாக 14 நாள்கள் கிரிக்கெட் வீரர்கள் பயோ-பபுள் சூழலில் இருக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே ஐபிஎல் தொடருக்கான செப்டம்பர் மாதத்திலிருந்து பபுளில் இருக்கும் இந்திய வீரர்கள், மீண்டும் மூன்று மாதங்கள் பபுளில் இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இதைப்பற்றி இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி கூறுகையில், ''இந்த கரோனா பயோ பபுளில் மீண்டும் மீண்டும் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நமது அணியில் சிறந்த வீரர்கள் இருக்கும்போது பயோ பபுளில் இருப்பது கடினமில்லை. இப்போது இந்தச் சூழலை அனுபவிக்கிறோம். ஆனால் இதே சூழல் தொடரும்போது நிச்சயம் சலிப்படைய வைக்கிறது.